இதேமுறையில் சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர்

மேலும், இதேமுறையில் சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர். இது குறித்து வாஷிங்டன் மருத்துவ பல்கலை., டாக்டர் ஜாப்ரி ஹென்டர்சன் கூறுகையில், இது மிகப்பழங்கால நடைமுறைதான். பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன்தந்துள்ளது. ஆனால், இதே நடைமுறையிலான சிகிச்சை, கொரோனாவை குணப்படுத்த எந்தளவிற்கு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும், எனக்கூறினார்.